திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இதுதொடர்பாக, கடந்த மாதம், 4 பேர் கைது செய்யப்பட்டனர். பால் நிறுவனம், திண்டுக்கல், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலபாபா பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின் மற்றும் திருப்பதி அருகே ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரியின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினய்காந்த் சாவ்டா கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 4 பேரும் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர். 3 வாரங்களுக்கு முன்பு விசாரணைக்காக 4 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அபூர்வா வினய்காந்த் சவுதாவிடம் நடத்திய விசாரணையில், நெய்யில் ரசாயனம் கலந்திருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர், யாருக்கும் தெரியாமல் நெய்யில் கலப்படம் செய்ய கற்றுக்கொண்டு, பின் இப்பணியை மேற்கொண்டது தெரியவந்தது. இதற்கான ரசாயனங்களை எங்கிருந்து வாங்கினார்?
இதில் வேறு யாருக்கு தொடர்பு? விவரங்களை மறைத்தார். இதனிடையே அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திருப்பதி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அபூர்வா வினய்காந்த் சவுதா, பொமில் ஜெயின் ஆகியோரை 3 நாள்கள் விசாரிக்க நேற்றுமுன்தினம் அனுமதி அளித்தது. அதன்படி நேற்று இருவரையும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கியது. சிபிஐ காவலில் அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.