கல்வி என்பது மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. இந்த நவீன தொழில்நுட்ப உலகில், கல்வி முறைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதனிடையில், மத்திய அரசு சிபிஎஸ்இ (CBSE) 2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி, 10ஆம் வகுப்பு தேர்வு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல், பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ஆண்டு முழுவதும் இரண்டு முறை நடைபெறும். இது மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி பெறவும் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. மாணவர்கள் தற்போது, மனப்பாடத்தை விட, திறன் சார்ந்த கேள்விகளைப் புரிந்து கொண்டு தேர்வு எழுத வாய்ப்பு பெறுகின்றனர்.
சிபிஎஸ்இ தேர்வுகள், 2024-25 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் இறுதிவரை நடைபெறின. இதில், 24.12 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்வு எழுதியுள்ளனர். அதே நேரத்தில், 12ஆம் வகுப்பு தேர்வுக்கு 17.88 லட்சம் மாணவர்கள் 120 பாடங்களில் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுகள் முடிந்த பின், மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மிக முக்கியமானவையாக உள்ளன. ஆனால் இதுவரை, அதிகாரப்பூர்வமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. முன்னாள் ஆண்டுகளில், 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டன.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.