புது டெல்லி: லடாக், காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பனி மூடிய பகுதிகளில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும், பிற பிராந்தியங்களில் மார்ச் 1, 2027 அன்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்.
இது தொடர்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் ஜெனரல் இணையதளத்தில் ஒரு பதிவில், “நாட்டில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும்.

மொபைல் செயலி மூலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தகவல்கள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொபைல் போன்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிப்பார்கள்.
அதே நேரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த தகவல்களைப் பதிவு செய்ய உதவும் வகையில் ஒரு வலைத்தளம் தொடங்கப்படும். ”