புதுடெல்லி: டெல்லி ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி 2020ல் காலமானார்.
நாட்டின் 13வது ஜனாதிபதியாக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தார்.அதற்கு முன் 2009 முதல் 2012 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி அமைச்சராக இருந்தார்.2019ல் மத்திய பா.ஜ.க. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் டெல்லி ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நினைவிடத்திற்கு அருகில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்தியா, ராஜீவ் காந்தி மற்றும் சரண் சிங் ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் உள்ளன.
அங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐ.கே. குஜ்ரால், நரசிம்மராவ் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வெங்கட்ராமன், நாராயணன் ஆகியோருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, அவருக்கு நினைவிடம் அமைத்ததை பாராட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.