ஸ்ரீநகர்: நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையாக இருந்த ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை முனிசிபாலிட்டியாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசை மாற்ற முடியும் இங்குள்ள மக்களை நம்பாதீர்கள், அவர்களை ஏன் இங்கு வைத்திருக்கிறீர்கள், “காஷ்மீரில் எங்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டீர்கள்” என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார். “ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதற்கான மற்றொரு அறிகுறி.
இதனால்தான் ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான, நீர்த்துப் போகாத மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடு, தேர்தலுக்கு முன் உறுதியான அர்ப்பணிப்பு தேவை. ஜம்மு காஷ்மீர் முதல்வர் தனக்கு பியூனை நியமிக்குமாறு லெப்டினன்ட் கவர்னரிடம் கெஞ்சும் நிலையில் இருக்கக் கூடாது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இந்த திருத்தப்பட்ட விதிகளின்படி, ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அட்வகேட்-ஜெனரல், சட்ட அதிகாரிகள் (நீதிமன்ற நடவடிக்கைகளில் அட்வகேட்-ஜெனரலுக்கு உதவக்கூடியவர்கள்) நியமனம் செய்வதற்கு முன், சட்டம், நீதி மற்றும் பாராளுமன்ற விவகாரத் துறை முதன்மைச் செயலர் மூலம் லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், சிறைகள், வழக்குகள் இயக்குனரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும்.