புது டெல்லி: சுவாச நோய்களுக்கான மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங், “இந்தியாவில் முதல் முறையாக, ‘நபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இது புற்றுநோய் நோயாளிகள் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டிபயாடிக் மருந்து இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறு ஆகும்.

மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில்’ வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.