புது டெல்லி: சமூக ஊடகமான ரெடிட்-ல் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான செய்தியை வெளியிட்டுள்ளார். அவரது உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை மற்றும் தலைவலி போன்ற பல விவரிக்க முடியாத அறிகுறிகளை அவர் அனுபவித்து வருகிறார். அவர் அனைத்து வகையான சோதனைகளையும் மேற்கொண்டார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவரது உடலில் உள்ள பிரச்சனைக்கான சரியான காரணத்தை மருத்துவ நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் சாட் ஜிபிடி தளத்தில் அவரது உடலில் உள்ள பிரச்சனைகளைத் தேடினார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி வழங்கிய தகவலில் அவருக்கு ஹோமோசைகஸ் A1298C MTHFR பிறழ்வு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மரபணு பிறழ்வு என்பது 7 முதல் 12 சதவீத மக்களை பாதிக்கும் ஒரு அரிய நோயாகும்.
இந்தத் தகவலை அவர் தனது மருத்துவரிடம் எடுத்துச் சென்ற பிறகு, MTHFR பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் இப்போது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.