சத்தீஸ்கரில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், கபிர்தாம் மாவட்டத்தில் பரஸ்வாரா கிராம பஞ்சாயத்தில் 11 வார்டுகளில் 6 பெண்கள் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதன் பின்னணியில், அவர்கள் பதவி ஏற்பு விழாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக, அவர்களுடைய கணவன்மார்கள் பதவி ஏற்றுள்ளனர். இந்த சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாக செய்தியாக பரவியது. பஞ்சாயத்து செயலாளர் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கான பதவியை அவர்களது கணவன்மார்கள் ஏற்றுவது அவர்களின் உரிமைகளுக்கு மாறானது என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி அஜய் திரிபாதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.