புதுடெல்லி: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. எஃப்.டி.ஐ., நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.
வீக்கம்
இந்திய குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் இல்லை. அதிக முதலீடு செய்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால், உலக அளவில் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
2021க்கு பிறகு தனியார் முதலீடுகள் சரிவில் இருந்து மீண்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டில் விவசாயத்துறை சிறப்பான வளர்ச்சியை எட்டும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.