டெல்லி: இந்தியாவுடனான எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக இமாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.