திருப்பதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். பின்னர், பியூஷ் கோயல் திருச்சானூர் பத்மாவதி கோயிலுக்குச் சென்று கிருஷ்ணபட்டினம் துறை தலைமையகத்திற்குச் செல்லத் தயாரானார்.

அப்போது, ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, குடும்பத்தினருடன் விமானத்தில் டெல்லி புறப்பட்டார். இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதைக் கண்டறியுமாறு டிஜிபி ஹரிஷ் குமார் குப்தாவுக்கு கடிதம் எழுதினார்.
அடுத்து, டிஜிபி தலைமை விஜிலென்ஸ் அதிகாரிக்கு, “முதல்வர் உட்பட விவிஐபிக்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் சிக்கலை எதிர்கொள்கிறது. இந்த ஹெலிகாப்டரை இனி பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று கடிதம் எழுதினார்.