எடாவா: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடனான சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
6 தொகுதிகளின் சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு அஞ்சலி செலுத்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எடவா வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், “இந்தியா கூட்டணி அமையும் என்று தான் கூற விரும்புகிறேன். சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி தொடரும். அரசியல் பற்றி விவாதிக்க இது நேரமில்லை” என்றார்.