முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) வயது மூப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 26) இரவு காலமானார்.
மன்மோகன் சிங்கின் மறைவுக்குப் பிறகு, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், பிரியங்காவும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்குகள் நாளை (டிசம்பர் 28) நடைபெறும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், ‘காங்கிரஸுக்கும், நாட்டிற்கும் சின்னமாக மன்மோகன் சிங் இருந்தார். சுதந்திர இந்தியாவின் மாவீரன். அவருடைய பணியும், நாட்டை நன்கு ஆளும் திறமையும் அனைவருக்கும் தெரியும்.’ மேலும் 7 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.