சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஜனாதிபதி மற்றும் கவர்னரின் முடிவுகளுக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு வாதம் முன்வைத்தது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், கவர்னர் ஒரு மாதத்திற்குள், ஜனாதிபதி மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியார். அது மனுவாக மாற்றப்பட்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரள அரசு பதிலளித்தன.
மத்திய அரசின் வாதம்: உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது. காலக்கெடு நிர்ணயம் செய்வது பாராளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் உரியது, நீதிமன்றத்திற்கு அல்ல. சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே உரியது, நீதிமன்றம் பேனா, காகிதம் எடுத்து சாசனத்தை திருத்தும் நிலை உருவாகக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக, கேரள தரப்பும் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்றனர். ஆனால் மத்திய அரசு, ஜனாதிபதி கடிதம் வழிகாட்டுதலுக்கானது, அதனை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தது.
நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் கவர்னர் செயல்பட வேண்டிய நிலை இருப்பதாகவும், ஜனாதிபதியின் கேள்விகள் சட்டப்பூர்வமானவை என்றும் வாதிடப்பட்டது. தீர்ப்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.