பாட்னா: பீகாரில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் அர்வால் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார்: ஒரு முறை நான் ஒரு ‘மௌல்வி’ (இஸ்லாமிய மதகுரு) யிடம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை உள்ளதா என்று கேட்டேன். அவர் ஆம் என்றார்.
அத்தகைய அட்டைகள் இந்து-முஸ்லீம் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? நான் கேட்டேன். அவர் இல்லை என்றார். அவர் எனக்கு வாக்களித்தாரா என்று கேட்டேன். அவர் ஆம் என்றார். கடவுள் மீது சத்தியம் செய்யச் சொன்னபோது, அவர் இல்லை என்று பதிலளித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களையும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பதில்லை. அத்தகையவர்களை நாம் நமக் ஹராம் (துரோகிகள்) என்று அழைக்கிறோம். நான் மதகுருவிடம், நமக் ஹராம் வாக்குகளை விரும்பவில்லை என்று சொன்னேன். பிரதமர் மோடி உங்களைத் துன்புறுத்தினாரா என்று கேட்டபோது, அவர் இல்லை என்றார்.
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் பாடுபடுகிறது. அதனால்தான் பீகார் இப்போது மாறிவிட்டது என்று அவர் கூறினார். ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் இதைக் கண்டித்துள்ளன.