புதுடில்லி: வெளிநாட்டு கிளைண்ட்டை நடனமாடி வரவேற்ற கார்ப்பரேட் ஊழியர்கள் குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
வெளிநாட்டு கிளைண்ட் தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு கிளைண்ட் ஈர்க்கப்படுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.