புதுடெல்லி: பீகாரில் பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தது குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு, கடந்த சில நாட்களாக புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில், 10க்கும் மேற்பட்ட பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரவு
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தது குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலங்கள் இடிந்து விழுவதற்கு என்ன காரணம்? இது குறித்து விசாரிக்க குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.