டெல்லி: திருவண்ணாமலை அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை 1.5 மீட்டர் சாலைப் பணியை மட்டும் மேற்கொண்டு 36 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வேலூர் – திருவண்ணாமலை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 110 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிப் பாதையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் வல்லம், ஏனம்காரியாநந்தல், தென்னம்மாதேவி ஆகிய இடங்களில் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சாலையை மேம்படுத்துவதாக கூறி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையின் இருபுறமும், ஒன்றரை மீட்டர் மட்டுமே புதிய சாலை அமைத்துள்ளது.
வங்கிக் கடன் ஏதும் எடுக்காமல், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கிய நிதியே இதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வேலூர் – திருவண்ணாமலை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 2023 ஏப்ரல் முதல் நவம்பர் 2024 வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 36 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் பெறாமல் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீறியிருப்பது தெரியவந்துள்ளது.