சண்டிகர்: ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
தேர்தலின் போது மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் குழுவில் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டல் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மீர் என தெரியவந்தது. தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அரசியல் சூழலிலும் சமூகத்தில் நிலவும் பதற்றத்தையும் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது. இதில், அரசியல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.