சண்டிகர் நகரில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலையில் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் அலி கான் மக்முதாபாத் இந்த சர்ச்சையின் மையமாக உள்ளார்.
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைப் பற்றி அவர் வெளியிட்ட கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஹரியானா போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், ஹரியானா மாநில மகளிர் ஆணையம் மே 15க்குள் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அவர் பதிலளிக்காமல் தவிர்த்ததால், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேணு பாட்டியா, வீரப்பெண்கள் கலோனல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கிற்கு மரியாதை செலுத்தி, இந்த பேராசிரியர் செய்த தவறு மன்னிக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார். குறைந்தது அவர் ஆணையத்தின் முன் வருத்தம் தெரிவித்து ஆஜராக வேண்டியிருந்தது என்றார்.
இந்த விவகாரம் பல தரப்புகளில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெடிக்கின்றன. பலர் பேராசிரியரின் செயலை கண்டிக்க, கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் உள்ள கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அரசியல் கோணங்களும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களும் எவ்வாறு இணைய வேண்டும் என்பதற்கான கேள்விகளும் எழுந்துள்ளன.இந்நிலையில், பேராசிரியரின் எதிர்கால நிலை மற்றும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.