திருமலை: திருமலைக்கு வரும் சிலர் ஏழுமலையான் கோயில் முன்பும், மாடவீதி மற்றும் வேறு சில முக்கிய இடங்களிலும் தங்கள் மொபைல் போன்களில் ரீல்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. புனித தலமான ஏழுமலையான் கோயிலில் இதுபோன்றவர்களின் ரீல்களால் பக்தர்கள் வேதனைப்படுகிறார்கள்.

எனவே, திருமலையில் ரீல்கள் எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.