திருவனந்தபுரம்: டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வசிக்கும் மாநிலமாக கேரளா தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான்’ திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட ‘டிஜி கேரளா’ நிகழ்ச்சி மூலமாக, 21 லட்சம் மூத்த குடிமக்கள் டிஜிட்டல் திறன்களை கற்றுக்கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம், 60 வயதுக்குள் உள்ள மக்களுக்கு கணினி, ஸ்மார்ட்போன், இணையம் மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றிய தெளிவான பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. தொடக்கமாக புலம்பாரா கிராம பஞ்சாயத்தில் அறிமுகமான இந்த முயற்சி, தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது.
முதிர்ந்த குடிமக்கள் வீடியோ கால், வாட்ஸ்அப், இணையதளங்கள், வங்கி சேவைகள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசுத் திட்டங்களை ஆன்லைனில் அறிந்து பயன்பெறும் வழிகளை கற்றுள்ளனர். இந்த பயிற்சியில் பலர் தன்னார்வலர்களாகவும், என்.எஸ்.எஸ். மற்றும் குடும்பஸ்ரீ உறுப்பினர்களாகவும் பங்கேற்றுள்ளனர்.
முக்கியமாக, இந்த முயற்சியின் மூலம் மூத்த குடிமக்கள் தங்களை டிஜிட்டல் உலகுடன் இணைத்துக்கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சமூகம் முழுவதும் டிஜிட்டல் விழிப்புணர்வு பரவுவதற்கு இது மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.
தற்போது வரை 21.88 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இது தொடர்ந்து மேலும் பலரை கொண்டடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதோடு, டிஜிட்டல் ஊடாக தாங்கள் அரசின் பல சேவைகளை நேரடியாகப் பெறும் புதிய கதவாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் வெற்றி, கேரளாவின் சமூக மேம்பாட்டிலும், டிஜிட்டல் பிம்பத்திலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு டிஜிட்டல் புரட்சியின் வேர்கள் வலுவடைந்துள்ளன.