புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வுகளின் போது, தேர்வுகள் குறித்த விவாதம் (பரீக்ஷா பே சர்ச்சா) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். பிரதமரைப் போலவே ஈஷா அறக்கட்டளைத் தலைவர் ஜக்கி வாசுதேவும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அவர் கூறியதாவது:- இன்று, ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. நாம் ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாக செய்ய வேண்டும்.
மேலும், மாணவர்கள் தேர்வுகளை தங்களது அறிவுத்திறனுக்கு சவாலாக கருதக்கூடாது. தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் எல்லா நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போன்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்கக் கூடாது. உங்கள் அறிவாற்றலைத் தூண்டிக்கொண்டே இருங்கள். உங்கள் மூளையை அதிகமாக பயன்படுத்துங்கள். உங்கள் நுண்ணறிவை நீங்கள் எவ்வளவு அதிகமாக செயல்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பார்க்கும் அனைத்தையும் எளிதாக அணுக முடியும். மேலும் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.