புது டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளர் ஏமாற்றப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் கூறியதாவது:- ஒரு நபர், ஒரு வாக்கு என்ற முறை கடந்த 1951-52 தேர்தலிலிருந்து நடைமுறையில் உள்ளது. யாராவது தேர்தலில் இரண்டு முறை வாக்களித்திருந்தால், அதற்கான காரணத்தை தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தவிர, அனைத்து வாக்காளர்களையும் திருடர்கள் என்று அழைக்கக்கூடாது. வாக்கு திருட்டு என்ற பொய்யான கதை கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையின் மீதான தாக்குதலும் ஆகும்.
எனவே கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.