தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு இந்திய ரயில்வே உள்ளது. இதுகுறித்து, ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “இந்தாண்டு, தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு, கூடுதலாக, 2 லட்சம் பேர் பயணிக்கும் வகையில், 7,000 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே இயக்க உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது,” என்றனர்.
நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்வதால், இந்த காலகட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் சுமார் 3,050 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வடக்கு ரயில்வே கடந்த ஆண்டு 1,082 சிறப்பு ரயில்களை இயக்கியது. இது இந்த ஆண்டு 3,050 ஆக அதிகரித்துள்ளது.
இது 181 சதவீதம் அதிகமாகும். சிறப்பு ரயில்கள் தவிர, வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.