லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று சப்பாத்திக்காக மாவை உருட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரேபரேலிக்கு அருகிலுள்ள காகிபூர் சத்வா என்ற சிறிய கிராமத்தில், “ராணி” என்ற குரங்கு வாழ்கிறது. குரங்காகப் பிறந்தாலும், மனிதனைப் போன்ற பழக்கவழக்கங்களாலும், உதவி செய்யும் குணத்தாலும் கிராம மக்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த குரங்கு அசோக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் 8 ஆண்டுகளாக வசித்து வருகிறது. குரங்கு வீட்டு வேலைகளை செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சப்பாத்திக்கு மாவை உருட்டுவது, பாத்திரம் கழுவுவது, மசாலா அரைப்பது, சுடுவது போன்ற வீட்டு வேலைகளை குரங்கு ஆர்வத்துடன் செய்கிறது.
இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.