அதானி விவகாரம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது. அதானியிடம் இருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றதாக சிலர் விமர்சிக்கின்றனர். வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்க திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். அதானி குழுமம் இதற்காக ரூ. 100 கோடி நன்கொடை வழங்க முன்வந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் முதல்வர், அமைச்சர்கள் ரூ.100 கோடியை பகிர்ந்து கொண்டதாக பலரும் விமர்சித்து வருவதை ஏற்க முடியாது. எனவே, அதானி குழுமம் சார்பில் ரூ. 100 கோடியை வழங்க வேண்டாம். அந்த நன்கொடையை ஏற்க முடியாது என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். அதானி விவகாரத்தில் தெலுங்கானா அரசை தேவையில்லாமல் இழுக்காதீர்கள்.
டெண்டர் விவகாரத்தில் அதானி குழுமத்துக்கு சட்டப்படி அனுமதி வழங்கினோம். நிபந்தனைகளின்படி டெண்டரில் அதானி குழுமம் பங்கேற்றது. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் டெண்டரில் பங்கேற்க உரிமை உண்டு. அம்பானி, அதானி, டாடா என யார் வேண்டுமானாலும் சட்டப்படி டெண்டரில் பங்கேற்கலாம். நான் டெல்லி செல்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நான் டெல்லிக்கு 28 முறை வந்திருக்கிறேன் என்று காட்டுகிறார்கள். இதில் என்ன தவறு. என் மீது எந்த வழக்குகளும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் நிதி கேட்க உள்ளேன். நான் தொடர்ந்து செல்வேன். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.