பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம் பொறியாளர் தனது ரெடிட் சமூக வலைப்பின்னல் பக்கத்தில், “கடந்த சில மாதங்களாக நான் தோசை சுடும் ரோபோவை வடிவமைத்து வருகிறேன்.
நீங்கள் ஒரு எரிவாயு அடுப்பில் தோசை கல்லை வைத்தால், இந்த ரோபோ தானாகவே தோசை சுடும். இந்த ரோபோவுக்கு நான் திண்டி (சிற்றுண்டி) என்று பெயரிட்டுள்ளேன். என் வீட்டில் பெண்கள் தோசை சுடுவதில் சிரமப்பட்டதால் இந்த ரோபோவை உருவாக்கினேன்,” என்று அவர், தோசை சுடும் ரோபோவின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டு கூறினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களிடமிருந்து பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பல பெண்கள், குறிப்பாக திருமணமாகாத ஆண்கள், “இந்த ரோபோ எப்போது சந்தைக்கு வரும்?” என்று ஆவலுடன் கேட்டுள்ளனர்.