மத்திய அரசு, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுங்கக் கட்டண வசூலை டிஜிட்டல் முறையில் மாற்றவும் பல வருடங்களாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்வழியாக, சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண விதி 2025 நவம்பர் 15 முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி பணத்தில் கட்டணம் செலுத்தும் பயணிகள் வழக்கத்திற்கு விட இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்த மாற்றம் ஃபாஸ்டேக் மின்சார கட்டண முறையை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம். ஃபாஸ்டேக் மூலம் வாகன ஓட்டிகள் வரிசையில் நிற்காமல், கட்டணம் தானாக இணையத்தில் வசூலிக்கப்படும். இதனால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விரைவாக நகரும், எரிபொருள் சேமிக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணம் செலுத்தும் வாகனங்களுக்கு தனி வழித்தடங்கள் குறைக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம். எனவே, வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஃபாஸ்டேக் பொருத்திக்கொள்ள வேண்டும். ஃபாஸ்டேக் என்பது வாகன கண்ணாடியில் ஒட்டப்படும் மின்னணு குறியீடு (RFID Tag) ஆகும், இது வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு வாகன ஓட்டிகளை உடனடியாக ஃபாஸ்டேக் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தி வருகிறது. இதன் மூலம் பயண நேரமும் செலவும் குறையும். மேலும் நாட்டின் டிஜிட்டல் மாற்ற முயற்சிக்கும் ஒரு முக்கிய துணையாக இது அமையும்.