பெங்களூரு: போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெங்களூருவில் மருந்துகளை விரைவாக டெலிவரி செய்ய ஆளில்லா விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்கை ஏர் சிஇஓ அங்கித் குமார் கூறுகையில், “பெங்களூருவில் ட்ரோன்கள் மூலம் மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.

சில பெரிய மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ட்ரோன்கள் மூலம் மருந்துகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 கிலோ எடையுள்ள பொருட்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பலாம். இதன் மூலம் பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளித்து நோயாளிகளுக்கு சேவை செய்யலாம்” என்றார்.