புதுடெல்லி: டெல்லியில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை 5.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், டெல்லிவாசிகள் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள கடைக்காரர் அனிஷ், “எல்லா கட்டிடங்களும் நடுங்கத் தொடங்கின. வாடிக்கையாளர்கள் அலறத் தொடங்கினர்” என்றார். மேலும், ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு பயணி, “இங்கே ஒரு ரயில் ஓடுவது போல் உணர்ந்தேன். அனைத்து பயணிகளும் நடுங்கி பீதியடைந்தனர்” என்றார்.
மற்றொரு பயணி, “நிலநடுக்கம் சிறிது நேரம் மட்டுமே ஏற்பட்டது. ஆனால் தீவிரம் மிக அதிகமாக இருந்தது. அனைத்து ரயில்களும் அதிவேகத்தில் வருவது போல் உணர்ந்தேன்” என்றார். காசியாபாத்தில் வசிக்கும் ஒருவர், “அதிர்வுகள் மிகவும் வலுவாக இருந்தன. இதற்கு முன்பு நான் இதை உணர்ந்ததில்லை. முழு கட்டிடமும் அதிர்ந்தது.” என்றார்.
ரயில் நிலையத்தில் நின்ற ஒரு பயணி, “நான் காத்திருப்பு அறையில் இருந்தேன். அனைவரும் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். “ஒரு பாலம் அல்லது ஏதோ பெரிய கட்டிடம் இடிந்து விழுந்தது போல் உணர்ந்தேன்” என்றார்.
இதனால், திடீர் நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது.