சென்னை : இணையத்தில் ஒரு புகைப்படம் வெகுவாக வைரலாகி வருகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது பராமரிப்பாளரை காண மருத்துவமனைக்கு வந்த யானை பற்றிய புகைப்படம் தான் அது. எங்கு நடந்தது என்று தெரியாத நிலையில் இணையத்தில் வெகுவேகமாக வைரல் ஆகி வருகிறது.
யானை பராமரிப்பாளர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை காண யானை மருத்துவமனைக்கு சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
அதில், மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் பாகனை யானை தும்பிக்கையால் தட்டி எழுப்ப முயல்கிறது. இதுதான் தூய்மையான அன்பின் வெளிப்பாடு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தன்னை பராமரிப்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு அந்த யானை செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.