பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பு 64.33 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
2014-15-ல் வேலைவாய்ப்பின் எண்ணிக்கை 47.15 கோடியாக இருந்தது. இதனை உயர்த்தும் வகையில், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்ததாக அவர் கூறினார்.
2023-24-ல் வேலைவாய்ப்பு சதவீதம் 36% உயர்ந்துள்ளது. இதன் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மட்டும் 17.19 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதே சமயத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (2004-2014) வெறும் 2.9 கோடி வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டன.
கடந்த 2023-24 ஆண்டில் மட்டும் 4.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பில் மோடி அரசு முக்கிய பங்காற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.