புது டெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
“லஞ்சம் மற்றும் பிணையமற்ற கடன்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3,000 கோடி கடன்களை சட்டவிரோதமாக மாற்றி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அமலாக்க இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில், ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரக தலைமையகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும்,” என்று அது கூறியது.
நவம்பர் 11, 2024 அன்று டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் ஒரு FIR பதிவு செய்து வழக்கை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.