2024-25 நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், 2024-25-ம் ஆண்டிற்கு பிஎஃப் சேமிப்பிற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுடன், 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் பிஎஃப் சேமிப்புக்கான வட்டி செலுத்தப்படும். பிப்ரவரி 2024-ல், பிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2022-ம் ஆண்டில், பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 1977-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே குறைந்த வட்டி விகிதம். கடந்த 2015-16 நிதியாண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.