மகாராஷ்டிரா: கடந்த வாரம், மகாராஷ்டிராவில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஹிந்தி மொழி கட்டாயம் என்று ஃபட்னாவிஸ் அரசு உத்தரவிட்டது. தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்ததில் இருந்து, மகாராஷ்டிராவில் ஹிந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மராத்தி கட்டாயம், ஆனால் இந்தி கட்டாயம் இல்லை என்று முதல்வர் ஃபட்னாவிஸ் மழுப்பலான விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தி கட்டாயமில்லை என்று ஃபட்னாவிஸ் கூறியது போல் மத்திய அரசும் சொல்லுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிர அரசால் நியமிக்கப்பட்ட மாநில மொழிக் கொள்கைக் குழுவும் ஹிந்தியைக் கட்டாயமாக்குவதை எதிர்த்தது, மேலும் மாநில மொழிக் குழு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து முடிவை நிறுத்தி வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.