அயோத்தி: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் தரைத்தளத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்கான பிராண பிரதிஷ்டா விழா கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது: கோவிலின் முதல் தளம் கட்டும் பணி அடுத்த மாதம் நிறைவடையும்.
இதையடுத்து, இரண்டாவது தளத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கி, இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கோயில் வளாகத்தின் முழு கட்டுமானப் பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு நிருபேந்திர மிஸ்ரா கூறினார்.