போபால்: இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு உருவானது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தேவி அகல்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விமான நிலைய வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பகுதியில் காய்ந்த புற்களில் திடீரென தீ பற்றியது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த தீவிபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.