புதுடெல்லி: உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தையும், முன்னணி நாடுகளின் கரன்சிகளையும் கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். இது அந்நியச் செலாவணி என்று அழைக்கப்படுகிறது.
இந்த வழியில், இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென் போன்றவற்றை கையிருப்பில் வைத்திருக்கிறது. செப்டம்பர் 27 நிலவரப்படி, அத்தகைய அந்நியச் செலாவணியின் ஒட்டுமொத்த மதிப்பு 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ. 59.23 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இது புதிய வரலாறு காணாத உயர்வாகும். இதன் மூலம் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்ட 4-வது நாடாக இந்தியா மாறியுள்ளது.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு மட்டும் 10.46 பில்லியன் டாலர் அதிகரித்து 616.154 பில்லியன் டாலராக (ரூ. 51.77 லட்சம் கோடி) உள்ளது.
தங்கம் கையிருப்பு 2.18 பில்லியன் டாலர் அதிகரித்து 65.79 பில்லியன் டாலராக (ரூ.5.52 லட்சம் கோடி) உள்ளது. கரூர் வைஸ்யா வங்கி தலைவர் வி.ஆர்.சி.ரெட்டி கூறியதாவது:-
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதால், அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு அதிகரித்துள்ளது.