புதுடெல்லி: மணிப்பூரில் 2023 மே மாதம் தொடங்கிய வகுப்புவாத கலவரத்தில் அப்போதைய முதல்வர் பிரேன் சிங்கின் பங்கு இருப்பதாக சில ஆடியோக்கள் கசிந்துள்ளன. இதன் அடிப்படையில், நீதிமன்ற கண்காணிப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, குக்கி இன ஒருங்கிணைப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஆடியோ உரையாடல்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (சிஎஃப்எஸ்எல்) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிஎஃப்எஸ்எல்-ன் தடயவியல் அறிக்கை தயாராக இருப்பதாகவும், சீலிடப்பட்ட கவரில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.