திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சிறுத்தை நடமாடியது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் சிறுத்தை புதர்களுக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் குழுவாக மலை ஏறக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.