பாலக்காடு: கேரளாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பறவைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. எனவே, ஸ்ரீமன் நாராயண் மிஷன் குருவாயூர் கோயிலுக்கு அவர்களின் தாகத்தைத் தணிக்க சிறிய மண் பானைகளை (குடம்) வழங்கியது. குருவாயூர் தேவஸ்தானம் தற்போது பக்தர்களுக்கு இவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு 1001 மண் பானைகளை வழங்கியது. இந்த ஆண்டு 5001 மண் பானைகளை வழங்கியுள்ளது. இதனால் குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மண் பானைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றில் தண்ணீர் நிரப்பி பறவைகளுக்கு வைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கோயில் வளாகம் மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும் என்றும் பக்தர்களின் தரிசனத்துக்கு கோயில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.