உத்திர பிரதேசம் : குடிக்கவும் ஏற்றது கங்கை நீர் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அசுத்த நீர் கலப்பதில்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கும்பமேளா, சனாதன தர்மம், கங்கை நதி பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், போலி வீடியோ பரப்புவது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போலாகும் என எச்சரித்ததுடன், மாசுக் கட்டுப்பாடு வாரியம், கங்கை நீரை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், நீராடி வழிபட மட்டுமல்ல, குடிப்பதற்கும் அந்நீர் ஏற்றது என்றும் கூறினார்.