புதுடில்லி: ஜி.டி.பி. வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும்: பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.3 சதவீதத்தில் இருந்த 6.8 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.