புனே: சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “நான் குற்றம் செய்யவில்லை” என்ற கூறிய மனுவை புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
2023 மார்ச் மாதம் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், சாவர்க்கர் குறித்து ராகுல் செய்த உரை துல்லியமற்றதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, சாவர்க்கரின் பேரனான சத்யாகி, புனே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இது புனே நகரின் எம்.பி.-எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

நீதிபதி அமோல் ஷிண்டே விசாரித்து வரும் இந்த வழக்கில், ராகுலுக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில், “நான் குற்றம் செய்யவில்லை” என கூறி, வழக்கறிஞர் மூலம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி மனுவை ஏற்று, அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இது அரசியல் பரப்பில் கவனத்தை ஈர்த்த வழக்காகவே மாறியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த வழக்கு எந்தபக்கமாக நகரும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.