ராஞ்சி: உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் வசிக்கும் ராமச்சந்திர ராம், ஜார்க்கண்டின் பலமு மாவட்டத்தில் உள்ள லொட்வா கிராமத்திற்கு கூலி வேலை செய்யச் சென்றுள்ளார். அவரது மனைவி பிங்கி தேவி. அவர்கள் வசித்து வந்த குடிசை சமீபத்திய கனமழையால் சேதமடைந்தது. தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, அவர்களின் 5-வது குழந்தை ஆண் குழந்தை. அன்றிலிருந்து, தேவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சைக்கு பணம் இல்லாததால், அவர்கள் தங்கள் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.50,000-க்கு விற்றனர். ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அறிந்த முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, லெஸ்லிகஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழு விசாரணையைத் தொடங்கியது. பின்னர், அவர்கள் லதேஹர் மாவட்டத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ராம் தம்பதியினரின் விசாரணையில், அவர்களிடம் ஆதார் மற்றும் குடும்ப அட்டை இல்லாததால், அரசு நலத்திட்டங்களைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தம்பதியினருக்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை பெற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.