ராய்ப்பூர்: மருந்து வினியோகத்தில் ரூ.500 கோடி மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சத்தீஸ்கரில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-ம் ஆண்டு மருந்து பொருட்கள் வாங்கியதில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இந்த மோசடி தொடர்பாக சத்தீஸ்கரில் இன்று பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். சத்தீஸ்கர் முழுவதும் 18 இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்ப்பூர், துர்க் பகுதிகளில் உள்ள இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள், மருந்து சப்ளையர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.