கேரள நடிகரும், எம்புரான் பட இயக்குநருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவர், மோகன்லால் நடித்த மற்றும் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் படத்தின் பிரபலத்துடன் சர்ச்சைகளும் ஏற்பட்டன. பெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வந்த எம்புரான் படத்துக்கு வசூல் சாதனைகள் இருந்தாலும், சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால், அந்த படத்தில் நடித்த மோகன்லால் வருத்தம் தெரிவித்து, சில காட்சிகளை நீக்கியுள்ளார்.

இதன் பின்னர், பிருத்விராஜ் இயக்கிய கோல்ட், ஜனகண மன, கடுவா போன்ற படங்களின் வருமானம் தொடர்பான தகவல்களை கேட்டு, வருமானவரித்துறை அவற்றின் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஏப்.29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிருத்விராஜுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த நோட்டீசில், அவர் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு, ரூ.40 கோடி சம்பளம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக புகார் எழுந்தது. இதற்கான சோதனைகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு, ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.