டெல்லி: காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் வடக்கு ஒடிசாவை ஒட்டிய வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.
இது கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே 310 கிமீ தொலைவில், ஒடிசாவின் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 260 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆந்திராவில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது இதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.