வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தை உருவாக்கும் பிரிக்ஸ் நாடுகளின் திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஸ்டீபன் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய கரன்சி உருவாக்குவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கடந்த காலங்களில் ஆலோசித்த நிலையில், தற்போது இந்தியா இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
புதிய கரன்சியை பயன்படுத்தும் நாடுகளுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும் என அடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஜெய்சங்கர், அமெரிக்காவுடன் இந்தியா மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் வலுவானது. அதேபோல, அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. டிரம்ப் ஆட்சியில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெற்றுள்ளது என்றும், சில வர்த்தக தடைகள் இருப்பது உண்மை என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
கத்தாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயசங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.